• May 04 2024

எதிர்காலங்களில் அனைத்து தேர்தல்களையும் உரிய காலத்தினுள் நடாத்த எதிர்பார்ப்பு...! ஆணைக்குழு தவிசாளர் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 3rd 2023, 3:12 pm
image

Advertisement

தேர்தல் ஆணைக்குழுவின் முதல் நிகழ்வாக யாழ்ப்பாணம்  அலுவலகம் திறக்கப்பட்டுள்ளமை வரப்பிரசாதமாகும்.  முதலாவது மற்றும் இரண்டாவது தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி வேலையாக இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம் என தேர்தல்  ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பிரதான இலக்கை அடையும் நோக்குடன் மாவட்ட தேர்தல் அலுவலங்களுக்கு ஏற்ற வளங்ளை இயலுமானவரை வழங்கி வருகின்றோம்

மக்களுடைய இறைமை மற்றும் வாக்குரிமையைப் பாதுகாத்தல் ஆகியன இச் செயற்பாடுகளினூடாகப்  பாதுகாக்கப்பட வேண்டும்.  அதேபோல் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு மிக அதிக சேவையை வழங்குவது எமது நோக்கமாகும்.

அரசியலமைப்பினூடாக  தேர்தல் ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரங்களில் ஜனாதிபதித் தேர்தல் , மாகாணசபைத் தேர்தல் , உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மக்கள் தீர்ப்பு  போன்றவற்றை  நடாத்துதல்  பிரதான பொறுப்பாகவுள்ளது.

எது எவ்வாறாயினும் நடப்பதற்கு நியமிக்கபட்ட மாகாணசபைத் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்புகளிற்கு  அப்பால் நடாத்த முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும் எந்த அளவு விரைவாக நடாத்த முடியுமோ குறித்த தேர்தல்களை நடாத்துவதற்கு  தேர்தல்  ஆணைக்குழு என்ற ரீதியில் தயாராக உள்ளோம்.

அதேபோல்  அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உரிய அனைவரும் இதற்குரிய பொறுப்பை ஏற்க வேண்டும்.  எனவே எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் குறிப்பிட்ட காலத்தினுள்  நடாத்துதற்கு  நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.  எனத் தெரிவித்தார்.

எதிர்காலங்களில் அனைத்து தேர்தல்களையும் உரிய காலத்தினுள் நடாத்த எதிர்பார்ப்பு. ஆணைக்குழு தவிசாளர் தெரிவிப்பு.samugammedia தேர்தல் ஆணைக்குழுவின் முதல் நிகழ்வாக யாழ்ப்பாணம்  அலுவலகம் திறக்கப்பட்டுள்ளமை வரப்பிரசாதமாகும்.  முதலாவது மற்றும் இரண்டாவது தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி வேலையாக இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம் என தேர்தல்  ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.யாழில் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது பிரதான இலக்கை அடையும் நோக்குடன் மாவட்ட தேர்தல் அலுவலங்களுக்கு ஏற்ற வளங்ளை இயலுமானவரை வழங்கி வருகின்றோம்மக்களுடைய இறைமை மற்றும் வாக்குரிமையைப் பாதுகாத்தல் ஆகியன இச் செயற்பாடுகளினூடாகப்  பாதுகாக்கப்பட வேண்டும்.  அதேபோல் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு மிக அதிக சேவையை வழங்குவது எமது நோக்கமாகும்.அரசியலமைப்பினூடாக  தேர்தல் ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரங்களில் ஜனாதிபதித் தேர்தல் , மாகாணசபைத் தேர்தல் , உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மக்கள் தீர்ப்பு  போன்றவற்றை  நடாத்துதல்  பிரதான பொறுப்பாகவுள்ளது.எது எவ்வாறாயினும் நடப்பதற்கு நியமிக்கபட்ட மாகாணசபைத் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்புகளிற்கு  அப்பால் நடாத்த முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும் எந்த அளவு விரைவாக நடாத்த முடியுமோ குறித்த தேர்தல்களை நடாத்துவதற்கு  தேர்தல்  ஆணைக்குழு என்ற ரீதியில் தயாராக உள்ளோம்.அதேபோல்  அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உரிய அனைவரும் இதற்குரிய பொறுப்பை ஏற்க வேண்டும்.  எனவே எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் குறிப்பிட்ட காலத்தினுள்  நடாத்துதற்கு  நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.  எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement