• Apr 20 2025

சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ் – மக்களே அவதானம்

Chithra / Apr 18th 2025, 1:47 pm
image

  

"ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் பெயரில் போலியாக இந்த அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

"ஸ்ரீ தலதா வழிபாடு"க்காக யாருக்கும் இதுபோன்ற சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக ஒரு விசேட(விஐபி) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ் – மக்களே அவதானம்   "ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் பெயரில் போலியாக இந்த அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது."ஸ்ரீ தலதா வழிபாடு"க்காக யாருக்கும் இதுபோன்ற சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக ஒரு விசேட(விஐபி) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement