• May 05 2025

ஜனாதிபதிக்கு எதிராக பொய்யான அறிக்கை: நள்ளிரவில் CIDஇல் முறைப்பாடு..!

Sharmi / May 5th 2025, 11:36 am
image

கிரேக்கத்தில் (Greece) பாரிய முதலீடு செய்ததாக ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுக்கு எதிராக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை குறித்து அவசர விசாரணை நடத்தக் கோரி, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பதில் பணிப்பாளர் துசித ஹல் ஒலுவவுக்கு எதிராக நேற்றையதினம்(04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி கருத்துக்கள், ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், துசித ஹல்லொலுவ மற்றும்  அந்தக் கருத்துக்களை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப நடவடிக்கை எடுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவரின் சட்டத்தரணி அகலங்க உக்வத்தேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சட்டத்தரணி  உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டார்.



ஜனாதிபதிக்கு எதிராக பொய்யான அறிக்கை: நள்ளிரவில் CIDஇல் முறைப்பாடு. கிரேக்கத்தில் (Greece) பாரிய முதலீடு செய்ததாக ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுக்கு எதிராக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை குறித்து அவசர விசாரணை நடத்தக் கோரி, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பதில் பணிப்பாளர் துசித ஹல் ஒலுவவுக்கு எதிராக நேற்றையதினம்(04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி கருத்துக்கள், ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், துசித ஹல்லொலுவ மற்றும்  அந்தக் கருத்துக்களை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப நடவடிக்கை எடுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவரின் சட்டத்தரணி அகலங்க உக்வத்தேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சட்டத்தரணி  உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement