• Jul 27 2024

துப்பாக்கிகளுடன் விவசாயிகள்..! வழங்கப்படவுள்ள புதிய அனுமதி பத்திரம்..!samugammedia

Sharmi / May 18th 2023, 11:46 pm
image

Advertisement

விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் முன்னர் இருந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக கொண்டிருக்கவேண்டிய பயிர்ச்செய்கை நிலப்பரப்பின் அளவை 5 ஏக்கர் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடத்துக்குள் வன விலங்குகளால் பாரியளவில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக காலத்துக்கு ஏற்றதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் முற்போக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிப் பாவனை தொடர்பிலான மேலதிக விபரங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளுடன் விவசாயிகள். வழங்கப்படவுள்ள புதிய அனுமதி பத்திரம்.samugammedia விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். விவசாயத்திற்கு துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் முன்னர் இருந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக கொண்டிருக்கவேண்டிய பயிர்ச்செய்கை நிலப்பரப்பின் அளவை 5 ஏக்கர் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்துக்குள் வன விலங்குகளால் பாரியளவில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காலத்துக்கு ஏற்றதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் முற்போக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிப் பாவனை தொடர்பிலான மேலதிக விபரங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement