• May 04 2024

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிப்பு!

Chithra / Jan 10th 2023, 9:57 am
image

Advertisement

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சட்டக் கல்விச் சபை அறிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சட்டமாணி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சட்டக் கல்லூரியில் இணைவதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாயாகும்.

இது தவிர நடைமுறை பயிற்சி வகுப்பு கட்டணம், விரிவுரைகள், நூலகங்கள் என பல கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிப்பு சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சட்டக் கல்விச் சபை அறிவித்துள்ளது.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு சட்டமாணி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சட்டக் கல்லூரியில் இணைவதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாயாகும்.இது தவிர நடைமுறை பயிற்சி வகுப்பு கட்டணம், விரிவுரைகள், நூலகங்கள் என பல கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement