• Apr 16 2026

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் களஆய்வு

Chithra / Feb 23rd 2026, 3:54 pm
image

 

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர்  சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்த அவர்களுடன்  சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட  குழுவினர்  இணைந்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர்.

இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மக்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றியும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.

மேலும், திட்டங்கள் துரிதமாகவும் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் களஆய்வு  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர்  சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர்.கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்த அவர்களுடன்  சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட  குழுவினர்  இணைந்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர்.இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மக்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றியும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.மேலும், திட்டங்கள் துரிதமாகவும் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement