• Apr 08 2025

இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் திடீர் தீ விபத்து; நால்வர் பலி

Chithra / Apr 8th 2025, 7:44 am
image


குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த தீ விபத்து நேற்று இரவு (07) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நகரசபை ஊழியர்கள் இரண்டாவது எரிவாயு தொட்டியை பாதுகாக்க முடிந்தமையால், மேலும் அழிவைத் தடுக்கபட்டுள்ளது.

வெடிப்பு நிகழ்ந்த சுமார் 2 1/2 மணி நேரத்திற்குப் பிறகே, தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அந்த நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப வாகனம் ஒன்று வந்தபோது இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது, அந்த இடத்தில் இருந்த இரண்டு எரிவாயு தொட்டிகளில் ஒன்று - ஒவ்வொன்றும் சுமார் 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எரிவாயு நிரப்பும் பணியின் போது வெடிப்பு ஏற்பட்டு அந்த பகுதியே தீப்பிடித்து எரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் திடீர் தீ விபத்து; நால்வர் பலி குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்து நேற்று இரவு (07) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நகரசபை ஊழியர்கள் இரண்டாவது எரிவாயு தொட்டியை பாதுகாக்க முடிந்தமையால், மேலும் அழிவைத் தடுக்கபட்டுள்ளது.வெடிப்பு நிகழ்ந்த சுமார் 2 1/2 மணி நேரத்திற்குப் பிறகே, தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.அந்த நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப வாகனம் ஒன்று வந்தபோது இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.சம்பவத்தின் போது, அந்த இடத்தில் இருந்த இரண்டு எரிவாயு தொட்டிகளில் ஒன்று - ஒவ்வொன்றும் சுமார் 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், எரிவாயு நிரப்பும் பணியின் போது வெடிப்பு ஏற்பட்டு அந்த பகுதியே தீப்பிடித்து எரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கின்றன.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement