அங்கொடை சந்திப்பில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ, தற்போது அருகிலுள்ள இரண்டு வீடுகளுக்கும் பரவியுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போது, கோட்டே மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டன.
கடை மற்றும் இரண்டு வீடுகளில் தீ பரவல் அங்கொடை சந்திப்பில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ, தற்போது அருகிலுள்ள இரண்டு வீடுகளுக்கும் பரவியுள்ளது.தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியவில்லை.தற்போது, கோட்டே மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தீ விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டன.