• Jun 26 2024

வியட்நாமில் தீப்பரவல் - 56 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Sep 14th 2023, 7:05 am
image

Advertisement

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு ஏற்பட்ட தீபரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் தீ பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என ஹனோய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வியட்நாமில் தீப்பரவல் - 56 பேர் உயிரிழப்பு samugammedia வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேற்று இரவு ஏற்பட்ட தீபரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் தீ பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என ஹனோய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement