• Nov 26 2024

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த முத­லா­வது முஸ்லிம் சிறுவன்..!

Chithra / Jun 16th 2024, 11:06 am
image

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

குறித்த சாதனையை  நேற்று  அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் முடித்துள்ளார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா நிறைவு செய்துள்ளார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.

மேலும் திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த முத­லா­வது முஸ்லிம் சிறுவன். திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.குறித்த சாதனையை  நேற்று  அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் முடித்துள்ளார்.பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா நிறைவு செய்துள்ளார்.தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வந்துள்ளார்.கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.மேலும் திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement