• May 19 2024

இலங்கையின் அடுத்த இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க? samugammedia

Tamil nila / Sep 5th 2023, 9:39 pm
image

Advertisement

இலங்கையின் 25ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவைகால நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அத்துடன், மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

எனினும், சஞ்சய வனசிங்கவுக்கு சேவைகால நீடிப்பை வழங்கி, விகும் லியனகேவிற்கு பின்னர் அவரை இராணுவ தளபதியாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

சஞ்சய வனசிங்க தமது பதவி காலத்துக்குள் எவ்வித ஒழுக்க மீறல்களிலும் ஈடுபடாமல் சிறந்த சேவையை வழங்கியுள்ளதாலேயே அவருக்கு இராணுவ தளபதி பதவி வழங்கப்படவுள்ளது.

மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகனுமாவார்.

சஞ்சய் வனசிங்க இராணுவத் தளபதியானால் அது உலக சாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தந்தையும், மகனும் இராணுவ தளபதியாக எங்கும் பதவி வகித்தில்லை எனக் கூறப்படுகின்றது.

இலங்கையின் அடுத்த இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க samugammedia இலங்கையின் 25ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவைகால நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அத்துடன், மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.எனினும், சஞ்சய வனசிங்கவுக்கு சேவைகால நீடிப்பை வழங்கி, விகும் லியனகேவிற்கு பின்னர் அவரை இராணுவ தளபதியாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.சஞ்சய வனசிங்க தமது பதவி காலத்துக்குள் எவ்வித ஒழுக்க மீறல்களிலும் ஈடுபடாமல் சிறந்த சேவையை வழங்கியுள்ளதாலேயே அவருக்கு இராணுவ தளபதி பதவி வழங்கப்படவுள்ளது.மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகனுமாவார்.சஞ்சய் வனசிங்க இராணுவத் தளபதியானால் அது உலக சாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தந்தையும், மகனும் இராணுவ தளபதியாக எங்கும் பதவி வகித்தில்லை எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement