• Nov 28 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக யாழில் கடற்றொழிலாளர்கள் பேரணி...!

Sharmi / Mar 5th 2024, 12:25 pm
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இன்றையதினம்(05) காலை வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில்  யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இடம்பெற்றது.

இன்று காலை 10:30 மணியளவில்  யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பமான குறித்த பேரணி வடமாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்ததுடன் அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பேரணியாக யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை  நோக்கி சென்ற நிலையில்  இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் போராட்டகாரர்கள் தூதரகத்தினுள் உட் செல்லமுடியாதவாறு தடைகளையும் ஏற்படுத்தியிருந்ததுடன்  ஐவரை மட்டும் தூதரகத்தினுள் செல்வதற்கு அனுமதி அளித்திருந்தனர்.

இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில்  வடமாகாணத்தை சேர்ந்த கடற்றொழில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 









இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக யாழில் கடற்றொழிலாளர்கள் பேரணி. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இன்றையதினம்(05) காலை வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில்  யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இடம்பெற்றது.இன்று காலை 10:30 மணியளவில்  யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பமான குறித்த பேரணி வடமாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்ததுடன் அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பேரணியாக யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை  நோக்கி சென்ற நிலையில்  இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் போராட்டகாரர்கள் தூதரகத்தினுள் உட் செல்லமுடியாதவாறு தடைகளையும் ஏற்படுத்தியிருந்ததுடன்  ஐவரை மட்டும் தூதரகத்தினுள் செல்வதற்கு அனுமதி அளித்திருந்தனர்.இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.குறித்த போராட்டத்தில்  வடமாகாணத்தை சேர்ந்த கடற்றொழில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement