மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா கரையோர மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா தோனா பகுதி கரையோர மீனவர்கள் சிறிய ரக இயந்திர படகு மூலமே மீனவத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
படகு மூலமான தொழில் நடவடிக்கைக்கு இயந்திரம் தேவைப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் தேவைப்படுவதுடன் சில வேலைகளில் மண்ணெண்ணெய்க்கு செலவளிக்கும் பணத்துக்கு கூட மீன்கள் பிடிபடுவதில்லை. அதேவேளை, வெறுங்கையுடன் திரும்ப வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் வாழ்வாதார தொழிலாக மீன் பிடி காணப்படுகிறது.
எனவே மண்ணெண்ணெய் மானியம் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மீன்பிடி நடவடிக்கை. மீனவர்கள் ஆதங்கம்.samugammedia மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா கரையோர மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிண்ணியா தோனா பகுதி கரையோர மீனவர்கள் சிறிய ரக இயந்திர படகு மூலமே மீனவத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.தற்போது மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். படகு மூலமான தொழில் நடவடிக்கைக்கு இயந்திரம் தேவைப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் தேவைப்படுவதுடன் சில வேலைகளில் மண்ணெண்ணெய்க்கு செலவளிக்கும் பணத்துக்கு கூட மீன்கள் பிடிபடுவதில்லை. அதேவேளை, வெறுங்கையுடன் திரும்ப வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதார தொழிலாக மீன் பிடி காணப்படுகிறது. எனவே மண்ணெண்ணெய் மானியம் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.