• Feb 04 2025

போலி ஆவணங்களைக் கொண்ட மேலும் 5 வாகனங்கள் மீட்பு! ஒருவர் கைது

Chithra / Feb 3rd 2025, 12:54 pm
image

 

போலி ஆவணங்களைத் தயாரித்து 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5 வாகனங்களை விற்பனை செய்த மகிழுந்து விற்பனையாளரான கலவானை போல்கொட்டுவே கடா என்பவர், வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட சோதனையின் போது குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மீட்கப்பட்ட ஐந்து வாகனங்களும் மூன்று இடங்களில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

வாகனங்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சந்தேகநபர் இரத்தினபுரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


போலி ஆவணங்களைக் கொண்ட மேலும் 5 வாகனங்கள் மீட்பு ஒருவர் கைது  போலி ஆவணங்களைத் தயாரித்து 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5 வாகனங்களை விற்பனை செய்த மகிழுந்து விற்பனையாளரான கலவானை போல்கொட்டுவே கடா என்பவர், வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட சோதனையின் போது குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட ஐந்து வாகனங்களும் மூன்று இடங்களில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சந்தேகநபர் இரத்தினபுரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement