• May 09 2024

திருமணம் செய்யவே தயங்கும் கிராமம்: பின்னணியில் செயற்படும் ஈக்கள்!

Sharmi / Dec 7th 2022, 10:48 pm
image

Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில் ஈக்கள் கொடுக்கும் தொல்லையால், கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் பெண் கொடுப்பதற்கு அக்கம் பக்கத்து கிராம மக்கள் மறுக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.

பார்ப்பதற்கு சிறு உயிரினமாக இருக்கும் ஈக்களால், ஒரு கிராமத்தில் திருமண பேச்சே எடுக்காமல் அவதிப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம்,  ஹர்தோய் என்னும் பகுதியில் பதைய்யன் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக யாருக்கும் திருமணம் நடக்கவில்லையாம். இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கு ஈக்களின் தொல்லை தான் என்று மக்கள் கூறுகின்றனர்.

சில ஆண்டுக்கு முன்பாக அப்பகுதியில் கோழிப் பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதனால் ஈக்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குறித்த  ஈக்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.

இதனால்,  குறித்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் பக்கத்து கிராமத்தினர் பெண் கொடுக்க மறுத்து வருகின்றனர். மேலும், உள்ளூரில் திருமணமாகி வந்த பெண்களும் தங்களது தாய் வீட்டிற்கு செல்லும் நிலையில்,  குறித்த கிராமத்திலிருந்து திருமணம் செய்து சென்ற பெண்கள் தனது தாய் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தைய்யன் புர்வா கிராமம் மட்டுமின்றி குயியன்ம் தாஹி, சேலம்பூர், ஜல்புர்வா, நயா கான் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் பலவும் இதன் காரணமாக கடும் அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்யவே தயங்கும் கிராமம்: பின்னணியில் செயற்படும் ஈக்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் ஈக்கள் கொடுக்கும் தொல்லையால், கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் பெண் கொடுப்பதற்கு அக்கம் பக்கத்து கிராம மக்கள் மறுக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.பார்ப்பதற்கு சிறு உயிரினமாக இருக்கும் ஈக்களால், ஒரு கிராமத்தில் திருமண பேச்சே எடுக்காமல் அவதிப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம்,  ஹர்தோய் என்னும் பகுதியில் பதைய்யன் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக யாருக்கும் திருமணம் நடக்கவில்லையாம். இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கு ஈக்களின் தொல்லை தான் என்று மக்கள் கூறுகின்றனர்.சில ஆண்டுக்கு முன்பாக அப்பகுதியில் கோழிப் பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதனால் ஈக்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குறித்த  ஈக்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.இதனால்,  குறித்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் பக்கத்து கிராமத்தினர் பெண் கொடுக்க மறுத்து வருகின்றனர். மேலும், உள்ளூரில் திருமணமாகி வந்த பெண்களும் தங்களது தாய் வீட்டிற்கு செல்லும் நிலையில்,  குறித்த கிராமத்திலிருந்து திருமணம் செய்து சென்ற பெண்கள் தனது தாய் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.தைய்யன் புர்வா கிராமம் மட்டுமின்றி குயியன்ம் தாஹி, சேலம்பூர், ஜல்புர்வா, நயா கான் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் பலவும் இதன் காரணமாக கடும் அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement