• Nov 23 2024

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

Chithra / Jul 8th 2024, 9:13 am
image

 

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், மில்லக்கந்த பகுதிக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எஹெலியகொட, எலபாத்த, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மறு அறிவித்தல் வரையில் கடற்றொழிலாளர்களை அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

அரபிக்கடல் பிராந்தியத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமெனவும் இதனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை.  களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், மில்லக்கந்த பகுதிக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எஹெலியகொட, எலபாத்த, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மறு அறிவித்தல் வரையில் கடற்றொழிலாளர்களை அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமெனவும் இதனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement