• Jan 22 2025

மன்னாரின் சில பகுதிகளுக்கும் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை

Chithra / Jan 19th 2025, 9:04 am
image


மல்வத்து ஓயா படுக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த  தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம்  தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை கடும் மழை காரணமாக சேனாநாயக்க  நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  6 அங்குலம் வீதம் 5 வான்கதவுகளை திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் 12 அங்குலம் வரை வான்கதவுகளை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மகாவலி ஆற்றின் சில பகுதிகளில் நேற்றிரவு இரவு முதல் பெய்து வரும் மழையினால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றுப் படுகையின் பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மன்னாரின் சில பகுதிகளுக்கும் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை மல்வத்து ஓயா படுக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த  தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம்  தெரிவித்துள்ளது.அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை கடும் மழை காரணமாக சேனாநாயக்க  நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி,  6 அங்குலம் வீதம் 5 வான்கதவுகளை திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் 12 அங்குலம் வரை வான்கதவுகளை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மகாவலி ஆற்றின் சில பகுதிகளில் நேற்றிரவு இரவு முதல் பெய்து வரும் மழையினால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றுப் படுகையின் பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement