• Nov 26 2024

திருமலையில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்...!தற்காலிக முகாம்களாக மாறிய பாடசாலைகள்...!samugammedia

Sharmi / Jan 4th 2024, 2:39 pm
image

திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் இன்று நான்காவது நாளாகவும் தங்கியுள்ளனர்.

வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மாவடிச்சேனை, வட்டவன்,சேனையூர் கிராமங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாடசாலை  முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதில் வட்டவன் தான்தோன்றிஸ்வரர் வித்தியாலயத்தில் 107 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்களும், மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 467 நபர்களுமாக மொத்தம் 764 நபர்கள் இன்னும் பாடசாலை முகாம்களில் தங்கியுள்ளனர்.

தொடர்ந்து வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வீடுகளில் வெள்ளநீர் காணப்படுவதோடு ஓரளவு குறைவடைந்துள்ளது.வயல் நிலங்கள் தொடர்ந்தும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு வீதியை ஊடறுத்து நான்காவது நாளாகவும் வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதை காணமுடிந்தது.

வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் வீதியில் தொடர்ந்தும் வெள்ளநீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்களை இயதிரப் படகு மூலம் கடற்படையினர் கொண்டு செல்வதை காணமுடிந்தது.அதோடு இன்றைய தினம் உயர்தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில் இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி நிலையத்தில் இடம்பெற்ற பரீட்சையின் விடைத்தாள்களை பரீட்சை அதிகாரிகள் இவ் படகு சேவை மூலம் கொண்டு வந்து வாகனத்தில் கொண்டு சென்றதையும் காணமுடிந்தது. 





திருமலையில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்.தற்காலிக முகாம்களாக மாறிய பாடசாலைகள்.samugammedia திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் இன்று நான்காவது நாளாகவும் தங்கியுள்ளனர்.வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மாவடிச்சேனை, வட்டவன்,சேனையூர் கிராமங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாடசாலை  முகாம்களில் தங்கியுள்ளனர்.இதில் வட்டவன் தான்தோன்றிஸ்வரர் வித்தியாலயத்தில் 107 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்களும், மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 467 நபர்களுமாக மொத்தம் 764 நபர்கள் இன்னும் பாடசாலை முகாம்களில் தங்கியுள்ளனர்.தொடர்ந்து வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வீடுகளில் வெள்ளநீர் காணப்படுவதோடு ஓரளவு குறைவடைந்துள்ளது.வயல் நிலங்கள் தொடர்ந்தும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு வீதியை ஊடறுத்து நான்காவது நாளாகவும் வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதை காணமுடிந்தது.வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் வீதியில் தொடர்ந்தும் வெள்ளநீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்களை இயதிரப் படகு மூலம் கடற்படையினர் கொண்டு செல்வதை காணமுடிந்தது.அதோடு இன்றைய தினம் உயர்தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில் இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி நிலையத்தில் இடம்பெற்ற பரீட்சையின் விடைத்தாள்களை பரீட்சை அதிகாரிகள் இவ் படகு சேவை மூலம் கொண்டு வந்து வாகனத்தில் கொண்டு சென்றதையும் காணமுடிந்தது. 

Advertisement

Advertisement

Advertisement