• May 19 2024

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் 10 வது ஆண்டாக ஈழத்துச் சிதம்பர பாத யாத்திரை!

Tamil nila / Dec 26th 2022, 10:42 pm
image

Advertisement

திருவெம்பாவையை முன்னிட்ட சைவ மகா சபையின் ஏற்பாட்டில் 10 வது ஆண்டாக

ஈழத்துச் சிதம்பர பாத யாத்திரை 01.01.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.


சிவனை நினைந்து அனுட்டிக்கும் மார்கழி திருவெம்பாவை காலத்தில் சைவத் தமிழ் மக்களிடையே ஆன்மீக சிந்தனையையும், அறநெறிப் பண்புகளையும் மேலோங்கச் செய்வதன் மூலம் மனித நேயம் மிக்க சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு 10 வருடங்களாக இப் பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகின்றது. 


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு சம்பில்துறை சம்பு நாத ஈச்சரத்தில், 21 அடி உயர சிவபெருமான் திருச்சொரூபத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் பாத யாத்திரையானது சாந்தை, பனிப்புலம், பறாளாய், சுழிபுரம் மேற்கு, பெரியபுலோ. சுழிபுரம் சந்தி ஆகிய பாதைகளுடாக நகர்ந்து பொன்னாலை - மூளாய் இராவணேச்சரம் சென்று அங்கிருந்து காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும். 


கடந்த காலங்களைப் போன்று இவ் வருடமும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என பல இடங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் இப் பாதயாத்திரையில் பங்கெடுக்கவுள்ளனர். 


பாத யாத்திரையாகச் செல்லும் அடியவர்களுக்கு பொன்னாலைச் சந்தியிலுள்ள நாராயணன் தாகசாந்தி நிலையத்தினர் மதியம் அன்னதானம் வழங்குவர். 


பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் சிவனடியவர்கள் காலை 7 மணிக்கு மாதகல் சம்புநாத ஈச்சரத்திற்கு வருகை தந்து கலந்துகொள்ளமாறு  சைவ மகா சபை சார்பாக வேண்டுகின்றோம்.

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் 10 வது ஆண்டாக ஈழத்துச் சிதம்பர பாத யாத்திரை திருவெம்பாவையை முன்னிட்ட சைவ மகா சபையின் ஏற்பாட்டில் 10 வது ஆண்டாகஈழத்துச் சிதம்பர பாத யாத்திரை 01.01.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.சிவனை நினைந்து அனுட்டிக்கும் மார்கழி திருவெம்பாவை காலத்தில் சைவத் தமிழ் மக்களிடையே ஆன்மீக சிந்தனையையும், அறநெறிப் பண்புகளையும் மேலோங்கச் செய்வதன் மூலம் மனித நேயம் மிக்க சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு 10 வருடங்களாக இப் பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு சம்பில்துறை சம்பு நாத ஈச்சரத்தில், 21 அடி உயர சிவபெருமான் திருச்சொரூபத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் பாத யாத்திரையானது சாந்தை, பனிப்புலம், பறாளாய், சுழிபுரம் மேற்கு, பெரியபுலோ. சுழிபுரம் சந்தி ஆகிய பாதைகளுடாக நகர்ந்து பொன்னாலை - மூளாய் இராவணேச்சரம் சென்று அங்கிருந்து காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும். கடந்த காலங்களைப் போன்று இவ் வருடமும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என பல இடங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் இப் பாதயாத்திரையில் பங்கெடுக்கவுள்ளனர். பாத யாத்திரையாகச் செல்லும் அடியவர்களுக்கு பொன்னாலைச் சந்தியிலுள்ள நாராயணன் தாகசாந்தி நிலையத்தினர் மதியம் அன்னதானம் வழங்குவர். பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் சிவனடியவர்கள் காலை 7 மணிக்கு மாதகல் சம்புநாத ஈச்சரத்திற்கு வருகை தந்து கலந்துகொள்ளமாறு  சைவ மகா சபை சார்பாக வேண்டுகின்றோம்.

Advertisement

Advertisement

Advertisement