• Oct 01 2024

நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்த வெளிநாட்டு தூதுவர்கள்..!Samugammedia

Tamil nila / Dec 16th 2023, 10:56 pm
image

Advertisement

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் நாடுகளின் தூதுவர்களும் தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் இன்று  காலை 10.00  நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்தனர்.



சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான்  நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி  (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ் தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk)  ஆகியோர்கள் 10 பேர்கள் கொண்ட குழுவினர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளையும், தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ஆன்மீக சமயத்தலைவர் ரிசி தொண்டு ஞான சுவாமிகளையும் சந்தித்தனர்.



இதன் போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமயரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமயத்தலைவர்களினால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சனைகள், அதன் ஊடாக அவர்கள் கிடைக்ககூடிய சாதகமான அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறக்கூடிய செயற்பாடுகள், இந்து சமய வளர்ச்சிக்கான அடிப்படை க்கு தேவையான விடயங்கள், கலாச்சார ரீதியாக எதிர்நோக்கும் விடயங்கள் பற்றி கலந்துறையாடப்பட்டன.

இலங்கைக்கான வெளி நாட்டுகளின் சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்காவின் ஆகிய உயர்ஸ்தானிகர்கள் பதவிநிலை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.


நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்த வெளிநாட்டு தூதுவர்கள்.Samugammedia மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் நாடுகளின் தூதுவர்களும் தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் இன்று  காலை 10.00  நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்தனர்.சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான்  நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி  (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ் தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk)  ஆகியோர்கள் 10 பேர்கள் கொண்ட குழுவினர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளையும், தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ஆன்மீக சமயத்தலைவர் ரிசி தொண்டு ஞான சுவாமிகளையும் சந்தித்தனர்.இதன் போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமயரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமயத்தலைவர்களினால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சனைகள், அதன் ஊடாக அவர்கள் கிடைக்ககூடிய சாதகமான அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறக்கூடிய செயற்பாடுகள், இந்து சமய வளர்ச்சிக்கான அடிப்படை க்கு தேவையான விடயங்கள், கலாச்சார ரீதியாக எதிர்நோக்கும் விடயங்கள் பற்றி கலந்துறையாடப்பட்டன.இலங்கைக்கான வெளி நாட்டுகளின் சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்காவின் ஆகிய உயர்ஸ்தானிகர்கள் பதவிநிலை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement