• May 07 2025

முல்லைத்தீவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முன்னெடுப்பு...!

Sharmi / May 3rd 2024, 1:17 pm
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -சிமாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று இன்று(03)  இடம்பெற்று வருகின்றது.

குறித்த நிகழ்வானது இன்றும், நாளையுமாக இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், தெளிவூட்டல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், உத்தேச தொழில்வாய்ப்புகள், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ருமேனியா, மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநாகதாரலிங்கம், வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், படையினர், மாணவர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


முல்லைத்தீவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முன்னெடுப்பு. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -சிமாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று இன்று(03)  இடம்பெற்று வருகின்றது.குறித்த நிகழ்வானது இன்றும், நாளையுமாக இரு தினங்களில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில், தெளிவூட்டல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், உத்தேச தொழில்வாய்ப்புகள், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது ருமேனியா, மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநாகதாரலிங்கம், வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், படையினர், மாணவர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now