• Nov 26 2024

மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மாற்றுவதற்கு அந்நிய சக்திகள் முயற்சி...! மாக்கஸ் அடிகளார் குற்றச்சாட்டு...!

Sharmi / Mar 7th 2024, 3:55 pm
image

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.

மன்னாரிலுள்ள அலுவலகத்தில் இன்று(7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் ,மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரகசியமாக இடம்பெற்று வருகின்றது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையின் காரணமாக கடல் வளம் சுரண்டப்படுவதால் எமது மீனவர்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும் இதற்கு எவ்வித முடிவும் கிடைக்காத நிலை காணப்படுகின்ற அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் முன் நின்று குரல் கொடுத்து வருகிறோம்.

இலங்கை  கடற்பரப்பினுள் ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து மீன் வளங்களை அழிப்பதோடு,மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது.

இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம் பெறுகின்றது.

எனவே, இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து மன்னார் தீவை பாதுகாக்க மன்னார் மாவட்ட மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர்.

அதேவேளை வளம் நிறைந்த மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மாற்றுவதற்கு அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றது.

எனவே, மக்களை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகள் மன்னார் தீவு பகுதியில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.




மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மாற்றுவதற்கு அந்நிய சக்திகள் முயற்சி. மாக்கஸ் அடிகளார் குற்றச்சாட்டு. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.மன்னாரிலுள்ள அலுவலகத்தில் இன்று(7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் ,மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரகசியமாக இடம்பெற்று வருகின்றது.இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையின் காரணமாக கடல் வளம் சுரண்டப்படுவதால் எமது மீனவர்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது.கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும் இதற்கு எவ்வித முடிவும் கிடைக்காத நிலை காணப்படுகின்ற அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் முன் நின்று குரல் கொடுத்து வருகிறோம்.இலங்கை  கடற்பரப்பினுள் ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து மீன் வளங்களை அழிப்பதோடு,மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது.இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம் பெறுகின்றது.எனவே, இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து மன்னார் தீவை பாதுகாக்க மன்னார் மாவட்ட மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர்.அதேவேளை வளம் நிறைந்த மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மாற்றுவதற்கு அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றது.எனவே, மக்களை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகள் மன்னார் தீவு பகுதியில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement