• Jan 15 2025

2024ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு!

Chithra / Jan 15th 2025, 2:34 pm
image


2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் 10.1 சதவீதம் அதிகரித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது. 

இந்தநிலையில், கடந்த ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 530.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் அந்த தொகை 613.8 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் 10.1 சதவீதம் அதிகரித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டில் வெளிநாட்டு பணவனுப்பல் 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 530.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் அந்த தொகை 613.8 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement