• May 22 2024

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு!

Sharmi / Dec 23rd 2022, 2:05 pm
image

Advertisement

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கிழக்கு சபா பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான குற்ற செயல்களை தடுக்கும் விதமாக இத்தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளதாக கிழக்கு சபா பாதுகாப்பு கட்டளையின் தளபதி ஹம்சா அகமது தெரிவித்திருக்கிறார். 


“இத்தேடுதல் நடவடிக்கையின் போது 290 வீடுகள் மற்றும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டது, 548 தனிநபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம் மற்றூம் தேசிய பதிவுச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்,” என அவர் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். 


மலேசியாவின் சபா மாநிலத்தில் பணியாற்ற சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டவர்களை தடுக்கும் விதமாக இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சபா பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான குற்ற செயல்களை தடுக்கும் விதமாக இத்தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளதாக கிழக்கு சபா பாதுகாப்பு கட்டளையின் தளபதி ஹம்சா அகமது தெரிவித்திருக்கிறார். “இத்தேடுதல் நடவடிக்கையின் போது 290 வீடுகள் மற்றும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டது, 548 தனிநபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம் மற்றூம் தேசிய பதிவுச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்,” என அவர் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மலேசியாவின் சபா மாநிலத்தில் பணியாற்ற சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டவர்களை தடுக்கும் விதமாக இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement