• May 18 2024

காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் பலி - அவசர நிலை உத்தரவை பிறப்பித்த ரஷ்யா..!samugammedia

Sharmi / May 11th 2023, 10:45 am
image

Advertisement

காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ரஷ்யாவில் இடம்பெறுள்ளது.

இந்த காட்டு தீயானது ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

அதனால்,  ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் போன்றன சேதம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.

மேலும் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை அந்நாட்டு அரசாங்கம்  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் பலி - அவசர நிலை உத்தரவை பிறப்பித்த ரஷ்யா.samugammedia காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ரஷ்யாவில் இடம்பெறுள்ளது. இந்த காட்டு தீயானது ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. அதனால்,  ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் போன்றன சேதம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை அந்நாட்டு அரசாங்கம்  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement