கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை, கூட்டுறவு சங்கத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலப்பகுதிகளில் மாவட்ட மட்டத்தில் புதிய தொகுதிகளை அமைப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது 'இந்த அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.
ஆகவே கடந்த காலங்களை மறந்து அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய வேண்டும் என பகிரங்க அழைப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார்.
கடந்த காலங்களை மறந்து மீண்டும் ஒன்றிணையுங்கள். முன்னாள் உறுப்பினர்களுக்கு மஹிந்த பகிரங்க அழைப்பு கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை, கூட்டுறவு சங்கத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.எதிர்வரும் காலப்பகுதிகளில் மாவட்ட மட்டத்தில் புதிய தொகுதிகளை அமைப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதன்போது 'இந்த அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. ஆகவே கடந்த காலங்களை மறந்து அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய வேண்டும் என பகிரங்க அழைப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார்.