• Jan 30 2025

மாவை.சேனாதிராஜா விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கின்றேன்; நாமல்

Sharmi / Jan 29th 2025, 9:34 am
image

முன்னாள் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,  மூத்த அரசியல்வாதியுமான மாவை.சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக  நேற்றையதினம்(28) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை மாவையின் உடல் நலம் குறித்து அறிவதற்காக பல்வேறு அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் மாவை.சேனாதிராஜா தொடர்பில் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், முன்னாள் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்தேன். 

அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





மாவை.சேனாதிராஜா விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கின்றேன்; நாமல் முன்னாள் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,  மூத்த அரசியல்வாதியுமான மாவை.சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக  நேற்றையதினம்(28) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதேவேளை மாவையின் உடல் நலம் குறித்து அறிவதற்காக பல்வேறு அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.இவ்வாறானதொரு நிலையில் மாவை.சேனாதிராஜா தொடர்பில் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த பதிவில், முன்னாள் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement