• Sep 15 2025

வீதியை கடக்க முற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலி

Chithra / Sep 14th 2025, 2:28 pm
image

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் - சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் சென்று, பின் மஞ்சக் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து இன்று இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மூதூர் - சம்பூர் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய  இலங்கை தமிழரசு கட்சியின்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன்   என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வீதியை கடக்க முற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலி திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மூதூர் - சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் சென்று, பின் மஞ்சக் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.இவ்விபத்து இன்று இடம் பெற்றுள்ளது.இவ்விபத்தில் மூதூர் - சம்பூர் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய  இலங்கை தமிழரசு கட்சியின்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன்   என்பவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement