• Mar 19 2025

சதொசவில் இடம்பெறும் மோசடி; அம்பலப்படுத்திய முஜிபுர் ரஹ்மான்!

Chithra / Mar 19th 2025, 12:08 pm
image


தெனியாய பகுதியில் ஏற்கனவே சதோச கிளை ஒன்று  இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு புதிய கிளையை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதற்கு கட்டிடம் எடுக்கப்பட்டு  நான்கு லட்சம் ரூபாய் வாடகை வழங்கபட  இருக்கிறது. அங்கு பணிபுரியும் பெண் ஒருவர்  ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தற்போது அந்த நிறுவனத்தில் பலர் பதவிகளை கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 

டிஜிஎம் பதவியிலிருந்த ஒருவர் இப்பொழுது இல்லை. டிஜிஎம் பர்ச்சேஸ் இல்லை. டிஜிஎம் ஆபரேஷன் இல்லை. டிஜிஎம் ஹெச்.ஆர் இல்லை. டிஜிஎம் பைனான்ஸ் அடுத்த வாரம் செல்ல இருக்கிறார்.டிஜிஎம் சந்தை பிரிவு செல்ல இருக்கிறார். 

இந்த ஆறு பதவிகளையும் நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த நிறுவனத்தில் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரி தான் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். 

மேலும் ஒரு பதவியையும் அவர் வகிக்கிறார். பொது முகாமையாளராகவும் "ஓடிட்" பதவியையும் அவர் வகிக்கிறார்.

அதுதான் அவருடைய பதவி மற்றையது அவருடைய பதில் கடமை. இரண்டு பதவிகளை வகிக்கிறார். அவ்வாறு இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. நிறைவேற்ற அதிகாரி என்கின்ற அந்த பதவி அனைத்து பதவிகளுக்கும் தாகத்தை ஏற்படுத்தக்கூடிய பதவி.

அவர் பொது கணக்காய்வு உத்தியோகத்தர் என்ற வகையில் இந்த பதவி வகிக்க முடியாது. இவர் ஐந்து மாதங்களாக இந்த இரண்டு பதவிகளையும் வகித்துக் கொண்டிருக்கிறார். இது உங்களுடைய தாப ன கோவையை மீறுவதாக இருக்கிறது தவிசாளர் இருக்கிறார். ஏன் அவர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றார்? அமைச்சின் செயலாளர் இருக்கின்றார். நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். எனக்கு புரியவில்லை சில நேரங்களில் உங்கள் சக நண்பர் என்று சொல்லப்படுகிறது. அவர் களனி   பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தார் என்று கூறுகிறார்கள்.

அதனால் தான் மற்றவர்கள் நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார்களா தெரியவில்லை. அதன் உண்மை எனக்கு தெரியாது.  உங்கள் பெயரை அவர் பயன்படுத்துவதால் அந்த நிறுவனத்தில் இருக்கின்ற எல்லோருமே   அஞ்சுகிறார்கள். இது நீங்கள் அறிந்து நடக்கிறதா இல்லையா என்று எனக்கு  தெரியாது எனத்தெரிவித்தார்.

சதொசவில் இடம்பெறும் மோசடி; அம்பலப்படுத்திய முஜிபுர் ரஹ்மான் தெனியாய பகுதியில் ஏற்கனவே சதோச கிளை ஒன்று  இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு புதிய கிளையை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,அதற்கு கட்டிடம் எடுக்கப்பட்டு  நான்கு லட்சம் ரூபாய் வாடகை வழங்கபட  இருக்கிறது. அங்கு பணிபுரியும் பெண் ஒருவர்  ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தற்போது அந்த நிறுவனத்தில் பலர் பதவிகளை கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். டிஜிஎம் பதவியிலிருந்த ஒருவர் இப்பொழுது இல்லை. டிஜிஎம் பர்ச்சேஸ் இல்லை. டிஜிஎம் ஆபரேஷன் இல்லை. டிஜிஎம் ஹெச்.ஆர் இல்லை. டிஜிஎம் பைனான்ஸ் அடுத்த வாரம் செல்ல இருக்கிறார்.டிஜிஎம் சந்தை பிரிவு செல்ல இருக்கிறார். இந்த ஆறு பதவிகளையும் நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த நிறுவனத்தில் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரி தான் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு பதவியையும் அவர் வகிக்கிறார். பொது முகாமையாளராகவும் "ஓடிட்" பதவியையும் அவர் வகிக்கிறார்.அதுதான் அவருடைய பதவி மற்றையது அவருடைய பதில் கடமை. இரண்டு பதவிகளை வகிக்கிறார். அவ்வாறு இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. நிறைவேற்ற அதிகாரி என்கின்ற அந்த பதவி அனைத்து பதவிகளுக்கும் தாகத்தை ஏற்படுத்தக்கூடிய பதவி.அவர் பொது கணக்காய்வு உத்தியோகத்தர் என்ற வகையில் இந்த பதவி வகிக்க முடியாது. இவர் ஐந்து மாதங்களாக இந்த இரண்டு பதவிகளையும் வகித்துக் கொண்டிருக்கிறார். இது உங்களுடைய தாப ன கோவையை மீறுவதாக இருக்கிறது தவிசாளர் இருக்கிறார். ஏன் அவர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றார் அமைச்சின் செயலாளர் இருக்கின்றார். நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். எனக்கு புரியவில்லை சில நேரங்களில் உங்கள் சக நண்பர் என்று சொல்லப்படுகிறது. அவர் களனி   பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தார் என்று கூறுகிறார்கள்.அதனால் தான் மற்றவர்கள் நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார்களா தெரியவில்லை. அதன் உண்மை எனக்கு தெரியாது.  உங்கள் பெயரை அவர் பயன்படுத்துவதால் அந்த நிறுவனத்தில் இருக்கின்ற எல்லோருமே   அஞ்சுகிறார்கள். இது நீங்கள் அறிந்து நடக்கிறதா இல்லையா என்று எனக்கு  தெரியாது எனத்தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement