• Apr 23 2026

யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்!

shanu / Apr 22nd 2026, 6:13 pm
image

யாழில் நீரிழிவுக் கழகத்தினரால் யாழ் கிறீன்பீல்ட் சனசமூக மண்டபத்தில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் இன்று (22) இடம்பெற்றது. 


இதில் கிராமசேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சனசமூக நிலைய உத்தியுாகத்தர், கிறீன்பீல்ட் மாதர் அமைப்பு, நீரிழிவுக்கழகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 


இதில் கண்பார்வைதிறன், காது கேட்கும் திறன், நீரிழிவு நிலை, இரத்த அழுத்தம் மற்றும் உடல் திணிவுச்சுட்டி என்பன பரிசோதிக்கப்பட்டன. 


பரிசோதனையின் போது பாதிப்புக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 



யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் யாழில் நீரிழிவுக் கழகத்தினரால் யாழ் கிறீன்பீல்ட் சனசமூக மண்டபத்தில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் இன்று (22) இடம்பெற்றது. இதில் கிராமசேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சனசமூக நிலைய உத்தியுாகத்தர், கிறீன்பீல்ட் மாதர் அமைப்பு, நீரிழிவுக்கழகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதில் கண்பார்வைதிறன், காது கேட்கும் திறன், நீரிழிவு நிலை, இரத்த அழுத்தம் மற்றும் உடல் திணிவுச்சுட்டி என்பன பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனையின் போது பாதிப்புக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Advertisement

Advertisement

Advertisement