சீனா
நாட்டின் உதவியுடன் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும்
நிகழ்வு கிளிநொச்சி பரந்தன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று(01) மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
நாளாந்தம்
கண்டாவளை மற்றும் பளை பகுதிகளில் வாழ்வாதாரமாக கொண்டு செயல்பட்டு வரும்
கடற்றொழிலாளர்களுக்கு தலா 150 லீற்றர் அளவில் 56 பேருக்கு இலவச மண்ணெண்ணை
சீனா அரசாங்கம் உதவி செய்துள்ளது. 










