• May 17 2024

சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா அனுமதி..! அரசு தீர்மானம் samugammedia

Chithra / Oct 24th 2023, 8:09 am
image

Advertisement

 

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமான இந்த திட்டம் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை உறுதி செய்யும் முகமாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

"சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இலவச விசா அனுமதிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது" என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த 18 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

மேலும், பிரதமர், சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் இணைந்து  இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா அனுமதி. அரசு தீர்மானம் samugammedia  இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமான இந்த திட்டம் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை உறுதி செய்யும் முகமாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்."சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இலவச விசா அனுமதிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது" என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த 18 ஆம் திகதி அறிவித்திருந்தார்.மேலும், பிரதமர், சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் இணைந்து  இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement