• May 21 2024

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களின் சுதந்திரம் முற்றாக பாதிக்கப்படும்- நிஷாந்தன்...!samugammedia

Sharmi / May 3rd 2023, 2:48 pm
image

Advertisement

ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டத்தில் தமிழினப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரையும் ஒன்றிணையுமாறு  பகிரங்க அழைப்பை தமிழ்க் கட்சிகளுக்கு  விடுத்திருந்தார்.
ஏற்கனவே ஆட்சிக்கு வந்த பின் ஒரிரு தடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூறினார்.  அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்ற நிலையில் இ்வ்வாறு கூறியமை புதிய விடயமல்ல என தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான  ஏற்பாடாகவே அழைப்பாகவே  விடுத்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் ரணில் விக்கிரமசிங்க நோக்காக உள்ளார். அவ்வாறு அமைக்க வேண்டுமாயின்  தமிழ்  முஸ்லீம் அரசியல் கட்சிகளை இணைத்தே அமைக்க வேண்டும். ஆனால் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசி்ங்கவின் பேச்சை நம்பத் தயாராகவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை வைத்து பொருளாதாரப் பிரச்சியைத் தீர்க்க முடியாது.   அவ்வாறு தீர்க்க முற்படுவதற்கு முன் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. இந் நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் இவ் அழைப்பு தொடர்பில் நிதானமாகவும் கவனத்துடனும் செயற்பட வேண்டும்.

1999 மற்றும் 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியின் பின் தற்போது அவருக்கு ஜனாதிபதியாக சந்தர்ப்பமாக இருக்கிறது. 2024 க்கு முன் ஜனாதிபதி தேர்தலை  நடாத்தி மக்கள் வாக்கு மூலம் ஆட்சியேற நினைக்கிறார்.

வடகிழக்கு பகுதியிலே தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி திணைக்களம் முதலானவற்றால் தமிழர்கள் தொல்லியல்கள் அடையாளங்கள் அழிக்கப்படுவதுடன் மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை  பிரச்சினை , முல்லைத்தீவு குருந்தூர் மலை பிரச்சானை , வவுனியா வெடுக்கு நாறி மலை பிரச்சினை உட்பட தையிட்டியிலும் மக்களின் சொந்த நிலத்தில் புதிய விகாரையை அமைத்து இந்த மாத நடுப்பகுதியில் திறப்புவிழாவையும் மேற்கொள்ளவுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் கோட்டபாயவின் ஆட்சியை விட ரணிலின் ஆட்சியிலே  அதிகமாக உள்ளது. பயங்கரவாத் சட்டத்தை நீக்குவதற்கு வடகிழக்கு மக்கள் பல போராட்டங்களை செய்து வந்த நிலையில் சிங்களமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதையடுத்து பல நாடுகளின் அழுத்தத்தால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊடகங்கள்,மக்களின் சுதந்திரத்தை முற்றாக பாதிக்கும்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு முன்  காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரங்கள் காணப்படும் நீண்ட காலமாக நடாத்தப்படாமலுள்ள மாகாண சபைத் தேர்தலை  நடாத்தி எமது அதிகாரங்களையாவது தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எனலே ரணில் விக்கிரமசிங்கா எமது இனப்பிரச்சினை தொடர்பி்ல் அழைப்பதில் தவறில்லை . ஆனால் அதற்கு முன் மகாநாயக்கர்கள்  உட்பட தங்களுடைய பக்கத்தினர் இவ் விடயத்தை மேற்கொள்ளத் தெளிவாக உள்ளனரா என்பதை கேட்டறிந்துவிட்டு தயாராக வேண்டும்.

தற்போது நடைபெறும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தி மாகாண சபைத் தேர்தலை நடாத்திய பின்னரே இனப்படுகொலைக்கான நீதியை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

கந்தரோடையில் தமிழ் பௌத்த எச்சங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட இடத்தில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் காணியை கொள்வனவு செய்து அதனை பிக்கு ஒருவருக்கு தானமாக வழங்கியிருந்த நிலையில், அக் காணியில் பௌத்த விகாரையொன்றை அமைக்க பிரதேச சபையிடம் அனுமதி கோரிய சம்பவமான்று நிகழ்ந்துள்ளது. எனவே தமிழ்த் தேசியப் பரப்பில் ஏராளமான சட்டத்தரணிகள் உள்ளனர். இவ் நடவடிக்கை தொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முன்வரவேண்டும்  என்றார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களின் சுதந்திரம் முற்றாக பாதிக்கப்படும்- நிஷாந்தன்.samugammedia ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டத்தில் தமிழினப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரையும் ஒன்றிணையுமாறு  பகிரங்க அழைப்பை தமிழ்க் கட்சிகளுக்கு  விடுத்திருந்தார்.ஏற்கனவே ஆட்சிக்கு வந்த பின் ஒரிரு தடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூறினார்.  அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்ற நிலையில் இ்வ்வாறு கூறியமை புதிய விடயமல்ல என தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான  ஏற்பாடாகவே அழைப்பாகவே  விடுத்துள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் ரணில் விக்கிரமசிங்க நோக்காக உள்ளார். அவ்வாறு அமைக்க வேண்டுமாயின்  தமிழ்  முஸ்லீம் அரசியல் கட்சிகளை இணைத்தே அமைக்க வேண்டும். ஆனால் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசி்ங்கவின் பேச்சை நம்பத் தயாராகவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை வைத்து பொருளாதாரப் பிரச்சியைத் தீர்க்க முடியாது.   அவ்வாறு தீர்க்க முற்படுவதற்கு முன் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. இந் நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் இவ் அழைப்பு தொடர்பில் நிதானமாகவும் கவனத்துடனும் செயற்பட வேண்டும்.1999 மற்றும் 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியின் பின் தற்போது அவருக்கு ஜனாதிபதியாக சந்தர்ப்பமாக இருக்கிறது. 2024 க்கு முன் ஜனாதிபதி தேர்தலை  நடாத்தி மக்கள் வாக்கு மூலம் ஆட்சியேற நினைக்கிறார்.வடகிழக்கு பகுதியிலே தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி திணைக்களம் முதலானவற்றால் தமிழர்கள் தொல்லியல்கள் அடையாளங்கள் அழிக்கப்படுவதுடன் மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை  பிரச்சினை , முல்லைத்தீவு குருந்தூர் மலை பிரச்சானை , வவுனியா வெடுக்கு நாறி மலை பிரச்சினை உட்பட தையிட்டியிலும் மக்களின் சொந்த நிலத்தில் புதிய விகாரையை அமைத்து இந்த மாத நடுப்பகுதியில் திறப்புவிழாவையும் மேற்கொள்ளவுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் கோட்டபாயவின் ஆட்சியை விட ரணிலின் ஆட்சியிலே  அதிகமாக உள்ளது. பயங்கரவாத் சட்டத்தை நீக்குவதற்கு வடகிழக்கு மக்கள் பல போராட்டங்களை செய்து வந்த நிலையில் சிங்களமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதையடுத்து பல நாடுகளின் அழுத்தத்தால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளனர்.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊடகங்கள்,மக்களின் சுதந்திரத்தை முற்றாக பாதிக்கும்.இனப்பிரச்சினை தீர்வுக்கு முன்  காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரங்கள் காணப்படும் நீண்ட காலமாக நடாத்தப்படாமலுள்ள மாகாண சபைத் தேர்தலை  நடாத்தி எமது அதிகாரங்களையாவது தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.எனலே ரணில் விக்கிரமசிங்கா எமது இனப்பிரச்சினை தொடர்பி்ல் அழைப்பதில் தவறில்லை . ஆனால் அதற்கு முன் மகாநாயக்கர்கள்  உட்பட தங்களுடைய பக்கத்தினர் இவ் விடயத்தை மேற்கொள்ளத் தெளிவாக உள்ளனரா என்பதை கேட்டறிந்துவிட்டு தயாராக வேண்டும். தற்போது நடைபெறும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தி மாகாண சபைத் தேர்தலை நடாத்திய பின்னரே இனப்படுகொலைக்கான நீதியை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.கந்தரோடையில் தமிழ் பௌத்த எச்சங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட இடத்தில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் காணியை கொள்வனவு செய்து அதனை பிக்கு ஒருவருக்கு தானமாக வழங்கியிருந்த நிலையில், அக் காணியில் பௌத்த விகாரையொன்றை அமைக்க பிரதேச சபையிடம் அனுமதி கோரிய சம்பவமான்று நிகழ்ந்துள்ளது. எனவே தமிழ்த் தேசியப் பரப்பில் ஏராளமான சட்டத்தரணிகள் உள்ளனர். இவ் நடவடிக்கை தொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முன்வரவேண்டும்  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement