• May 20 2024

ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி ! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 4:52 pm
image

Advertisement

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சீனா கொண்டுவந்த பிரேரணைக்கு பிரான்ஸும் தனது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 24ம் திகதியுடன், உக்ரைனில் போர் இடம்பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதற்காக உக்ரைனையும் ரஷ்யாவையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர சீனா தயாராகி வருகிறது.


அதற்கு உக்ரைனும் ரஷ்யாவும் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


அதற்காக சீன அதிபரை சந்திக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில் உலக நாடுகளும் தற்போது போர் நிறுத்தத்திற்கு ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி SamugamMedia உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சீனா கொண்டுவந்த பிரேரணைக்கு பிரான்ஸும் தனது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 24ம் திகதியுடன், உக்ரைனில் போர் இடம்பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதற்காக உக்ரைனையும் ரஷ்யாவையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர சீனா தயாராகி வருகிறது.அதற்கு உக்ரைனும் ரஷ்யாவும் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதற்காக சீன அதிபரை சந்திக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில் உலக நாடுகளும் தற்போது போர் நிறுத்தத்திற்கு ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement