• Mar 21 2025

பிரான்ஸ் நாட்டு பெண் இலங்கையில் மரணம் - சுற்றுலா வந்தவேளை நடந்த துயரம்

Chithra / Mar 20th 2025, 3:55 pm
image

எல்ல பகுதியில் அமைந்துள்ள லிட்டில் அடம்ஸ் ஸ்பீ்க்கை  (Little Adam's Peak)  தரிசிக்கச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) மாலை செங்குத்தான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

64 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.  

விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பணியாளர்கள் டிரோன் கமெராக்களின் உதவியுடன் உயிர்காக்கும் படையினர் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பெண் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு பெண் இலங்கையில் மரணம் - சுற்றுலா வந்தவேளை நடந்த துயரம் எல்ல பகுதியில் அமைந்துள்ள லிட்டில் அடம்ஸ் ஸ்பீ்க்கை  (Little Adam's Peak)  தரிசிக்கச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழுந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (19) மாலை செங்குத்தான பகுதியில் இடம்பெற்றுள்ளது.64 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.  விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அங்குள்ள பணியாளர்கள் டிரோன் கமெராக்களின் உதவியுடன் உயிர்காக்கும் படையினர் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.விபத்தில் காயமடைந்த பெண் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement