• Nov 25 2024

14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துவந்த தோழிகள் திடீரென உயிர்மாய்ப்பு

Chithra / Aug 30th 2024, 9:04 am
image


களுத்துறை - கஹமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குத்தாரிப்புவ கிராமத்தில் 14 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இரு நண்பிகள் வீட்டில் ஒன்றாக தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருமணமாகாத 52 மற்றும் 49 வயதுடைய அப்சரா செவ்வந்தி மற்றும் லலிதா உபமாலி ஆகிய  தோழிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த லலிதா உபமாலி கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் இந்த வீட்டில் அப்சரா செவ்வந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

உயிரிழந்த அப்சரா செவ்வந்தியின் பெற்றோர் நேற்று இரவு விகாரைக்கு பூஜைக்காக அழைத்ததாக அவரது தந்தை எட்மண்ட் ஜயசிங்க தெரிவித்தார்.

எனினும் இருவரும் வராத நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துவந்த தோழிகள் திடீரென உயிர்மாய்ப்பு களுத்துறை - கஹமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குத்தாரிப்புவ கிராமத்தில் 14 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இரு நண்பிகள் வீட்டில் ஒன்றாக தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.திருமணமாகாத 52 மற்றும் 49 வயதுடைய அப்சரா செவ்வந்தி மற்றும் லலிதா உபமாலி ஆகிய  தோழிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த லலிதா உபமாலி கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் இந்த வீட்டில் அப்சரா செவ்வந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.உயிரிழந்த அப்சரா செவ்வந்தியின் பெற்றோர் நேற்று இரவு விகாரைக்கு பூஜைக்காக அழைத்ததாக அவரது தந்தை எட்மண்ட் ஜயசிங்க தெரிவித்தார்.எனினும் இருவரும் வராத நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement