• Dec 11 2024

மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு : வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது

Tharmini / Nov 13th 2024, 11:48 am
image

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் நாளை (14) இடம்பெற உள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,

வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று (13) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு,

வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

23 கட்சிகளும்,25 சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 48 கட்சிகள் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டி இடுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் 8 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு : வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் நாளை (14) இடம்பெற உள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இன்று (13) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகிறது.மன்னார் மாவட்டத்தில் இம்முறை 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.23 கட்சிகளும்,25 சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 48 கட்சிகள் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டி இடுகின்றனர்.மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் 8 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.நாளைய தினம இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement