• Jul 01 2025

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு- நள்ளிரவு முதல் அமுலில்!

Thansita / Jun 30th 2025, 11:25 pm
image

எரிபொருட்களின் விலைகள் இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். 

 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும். 

இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா),  மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு- நள்ளிரவு முதல் அமுலில் எரிபொருட்களின் விலைகள் இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.அந்தவகையில் லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.  92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும். இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா),  மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement