• Oct 31 2024

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

Chithra / Oct 31st 2024, 1:20 pm
image

Advertisement

 

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இதுவாகும்.

இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.  எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இதுவாகும்.இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement