• May 19 2024

புது டெல்லியில் நாளை ஆரம்பமாகும் ஜி 20 மாநாடு! samugammedia

Tamil nila / Sep 8th 2023, 9:48 pm
image

Advertisement

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி சி ஜின் பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.

இதே போன்று, ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன் விமானம் மூலம் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார்.

ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் பைடனை வரவேற்றனர்.

புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய இரவு விருந்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது.

இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, நாளை 9ஆம் திகதி மற்றும் நாளைமறுதினம் 10ஆம் திகதிகளில் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

சீன ஜனாதிபதி சி ஜின் பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புது டெல்லியில் நாளை ஆரம்பமாகும் ஜி 20 மாநாடு samugammedia ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி சி ஜின் பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.இதே போன்று, ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன் விமானம் மூலம் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார்.ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் பைடனை வரவேற்றனர்.புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய இரவு விருந்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது.இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, நாளை 9ஆம் திகதி மற்றும் நாளைமறுதினம் 10ஆம் திகதிகளில் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.சீன ஜனாதிபதி சி ஜின் பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement