• Oct 24 2024

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை!

Tamil nila / Oct 24th 2024, 7:21 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி  பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரினால் இன்று பிற்பகல்  4:00 மணியளவில்  கைது செய்யப்பட்டிருந்தார்.

கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை பருத்தித்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபனும் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி  பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரினால் இன்று பிற்பகல்  4:00 மணியளவில்  கைது செய்யப்பட்டிருந்தார்.கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது முன்னெடுக்கப்பட்டது.பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.இதேவேளை பருத்தித்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபனும் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement