உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
உலக சந்தையில் எரிவாயு வழங்குனர்கள் தமது விலையை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்யாவிட்டால், தங்களது இயக்கச் செலவுகளை ஈடுகட்டுவதில் கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் உள்நாட்டில் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் இயக்கச் செலவுகள், ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் எரிவாயு தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யாதநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் இம்மாதம் 30ஆம் திகதி எரிவாயு விலை திருத்தத்தின் போது உரிய விலை உயர்வு இடம்பெறும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை - அரசிடம் கோரிக்கை உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஉலக சந்தையில் எரிவாயு வழங்குனர்கள் தமது விலையை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு செய்யாவிட்டால், தங்களது இயக்கச் செலவுகளை ஈடுகட்டுவதில் கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பில் உள்நாட்டில் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் இயக்கச் செலவுகள், ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் எரிவாயு தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யாதநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனடிப்படையில் இம்மாதம் 30ஆம் திகதி எரிவாயு விலை திருத்தத்தின் போது உரிய விலை உயர்வு இடம்பெறும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.