• Nov 25 2024

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Chithra / Aug 6th 2024, 9:14 am
image

 

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊடக உப நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள நிர்வாகிகள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தனித்தனியாக ஊடக துணை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த கால அவகாசம் நேற்று (05) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த போதிலும், தபால் மூலமான தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

அவர்களில் 8 சுயேட்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 8 வேட்பாளர்களும், வேறு கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றுக் கொள்வதற்காக தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்  ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, ஊடக உப நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள நிர்வாகிகள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தனித்தனியாக ஊடக துணை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த கால அவகாசம் நேற்று (05) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த போதிலும், தபால் மூலமான தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதுவரையில் 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.அவர்களில் 8 சுயேட்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 8 வேட்பாளர்களும், வேறு கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றுக் கொள்வதற்காக தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement