• Nov 14 2024

நெருங்கும் பொதுத் தேர்தல் - நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு திட்டம்!

Chithra / Nov 6th 2024, 11:44 am
image

 

இலங்கையின் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது.

இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,500 பேர் முப்படையைச் சேர்ந்த கூடுதல் அதிகாரிகளின் ஆதரவுடன், பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

52 வாக்கு எண்ணும் மையங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 131 வீதி தடுப்புகளை இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

இலங்கையில் பொதுத்தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

இதனையடுத்து 15ஆம் திகதியன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு வெளியாகிவிடும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.

நெருங்கும் பொதுத் தேர்தல் - நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு திட்டம்  இலங்கையின் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது.இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,500 பேர் முப்படையைச் சேர்ந்த கூடுதல் அதிகாரிகளின் ஆதரவுடன், பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.52 வாக்கு எண்ணும் மையங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 131 வீதி தடுப்புகளை இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள் அமைத்துள்ளனர்.இலங்கையில் பொதுத்தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.இதனையடுத்து 15ஆம் திகதியன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு வெளியாகிவிடும்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement