மலையக இளைஞர்களுக்கு நேரும் அநீதியை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று முன்னாள் இளைஞர் மன்ற உறுப்பினரும், இளைஞர் கழக தலைவருமான ஆர்.ஆனந்தபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு இளைஞர் கழகங்களில் சேரும் வாய்ப்பு குறைக்கப்பட்டு, ஒரு கிராமத்திலிருந்து வெறும் கிராம சேவை பிரிவை மட்டுமே உள்ளடக்கிய வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இது மட்டும் அல்லாமல், இவ்வேலைகள் எல்லாம் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அதிகாரபூர்வ நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் அரசியல் நலனுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்கச் செய்கிறது.
இது இளைஞர்களின் நம்பிக்கையைப் பிய்த்துவிடும் நடவடிக்கை. நாம் வாக்களித்தது மாற்றத்திற்காக – அதாவது சமத்துவமான, ஜனநாயகமிக்க ஒரு நாட்டிற்காக. ஆனால் இப்போது நாடாகவே சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.
நாங்கள் கேட்டது, அனைத்து இளைஞர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மலையக இளைஞர்களுக்கும் மற்றைய சமூக இளைஞர்களைப் போன்று உரிய இடம், உரிமை என்பன வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் தனது அரசியல் விருப்பங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. மலையக இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இளைஞர் சேவை மன்றம் அரசியல் தாண்டி, மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
இதற்கான உரிய நடவடிக்கை அரசனது மறுசீரமைப்பு செய்து தராவிட்டால் அதற்கான மாற்று வழிகளையும் எழுதுகிறவர் ஆகிய நாங்கள் மேற்கொள்வோம் என்பது தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.-என்றார்.
மலையக இளைஞர்களுக்கு நேரும் அநீதியை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - இளைஞர் மன்ற உறுப்பினர் கண்டனம் மலையக இளைஞர்களுக்கு நேரும் அநீதியை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று முன்னாள் இளைஞர் மன்ற உறுப்பினரும், இளைஞர் கழக தலைவருமான ஆர்.ஆனந்தபாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு இளைஞர் கழகங்களில் சேரும் வாய்ப்பு குறைக்கப்பட்டு, ஒரு கிராமத்திலிருந்து வெறும் கிராம சேவை பிரிவை மட்டுமே உள்ளடக்கிய வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இது மட்டும் அல்லாமல், இவ்வேலைகள் எல்லாம் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அதிகாரபூர்வ நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் அரசியல் நலனுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்கச் செய்கிறது.இது இளைஞர்களின் நம்பிக்கையைப் பிய்த்துவிடும் நடவடிக்கை. நாம் வாக்களித்தது மாற்றத்திற்காக – அதாவது சமத்துவமான, ஜனநாயகமிக்க ஒரு நாட்டிற்காக. ஆனால் இப்போது நாடாகவே சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.நாங்கள் கேட்டது, அனைத்து இளைஞர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மலையக இளைஞர்களுக்கும் மற்றைய சமூக இளைஞர்களைப் போன்று உரிய இடம், உரிமை என்பன வழங்கப்பட வேண்டும்.அரசாங்கம் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் தனது அரசியல் விருப்பங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. மலையக இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இளைஞர் சேவை மன்றம் அரசியல் தாண்டி, மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.இதற்கான உரிய நடவடிக்கை அரசனது மறுசீரமைப்பு செய்து தராவிட்டால் அதற்கான மாற்று வழிகளையும் எழுதுகிறவர் ஆகிய நாங்கள் மேற்கொள்வோம் என்பது தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.-என்றார்.