• Mar 29 2024

உலகளவில் 3.2 பில்லியன் கிரிப்டோகரன்சி ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளதாக தகவல்!

Tamil nila / Feb 1st 2023, 9:49 pm
image

Advertisement

உலகளவில் கடந்த ஆண்டில் கிரிப்டோகரன்சி ஹேக்கிங் மூலம், 3.2 பில்லியன் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், வங்கிகள் மற்றும் வணிகங்களால் பயன்படுத்தப்படும் தரவுகளை பார்க்கும் பிளாக் செயின் பகுப்பாய்வு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் படி, அக்டோபரில் மாத்திரம் 629 மில்லியன் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாளும் வடகொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஹேக்கர்களால் இயக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. 

பியாங்யாங்குடன் தொடர்புடைய ஹேக்கர்கள், கிரிப்டோகரன்சி சொத்துக்களில் 1.4 பில்லினை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு திருடப்படும் சொத்துக்களைப் பயன்படுத்தி ஏவுகணை திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலகளவில் 3.2 பில்லியன் கிரிப்டோகரன்சி ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளதாக தகவல் உலகளவில் கடந்த ஆண்டில் கிரிப்டோகரன்சி ஹேக்கிங் மூலம், 3.2 பில்லியன் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், வங்கிகள் மற்றும் வணிகங்களால் பயன்படுத்தப்படும் தரவுகளை பார்க்கும் பிளாக் செயின் பகுப்பாய்வு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, அக்டோபரில் மாத்திரம் 629 மில்லியன் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாளும் வடகொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஹேக்கர்களால் இயக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. பியாங்யாங்குடன் தொடர்புடைய ஹேக்கர்கள், கிரிப்டோகரன்சி சொத்துக்களில் 1.4 பில்லினை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு திருடப்படும் சொத்துக்களைப் பயன்படுத்தி ஏவுகணை திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement