• Dec 22 2024

கடற்றொழிலுக்கு சென்று தமிழ் நாட்டில் கரையொதுங்கிய வட கிழக்கு மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை..!

Sharmi / Dec 20th 2024, 11:45 am
image

கடற்றொழிலுக்கு சென்று தமிழ் நாட்டில் கரையொதுங்கிய வட கிழக்கு மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்டாளைச்சேனை  கப்பலடி மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக இயந்திர படகில் கடலுக்கு சென்ற மீனவர்களும் பருத்தித்துறை மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 05 மீனவர்களும் தமிழ் நாட்டில் சென்ற ஜுலை மாதம் 07ம் திகதி கரையொதுங்கினர்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கே.ஆர்.நிஸ்பர் என்பவர் காணாமல் போயுள்ளார். இம்மீனவர்களில் அட்டாளைச்சேனையிலிருந்து சென்ற இர்பான் எனும் மீனவர் சென்னை உயர்ஸ்தானிகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை மீனவர் துறையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 05 மீனவர்களான அட்டாளைச்சேனை சேர்ந்த எம்.எப்.முஸ்தகீன், வடமாகாணத்தை சேர்ந்த என்.குனபாலசிங்கம், ஏ.இராதாகிருஸ்னன், எம்.பிரமசிறி ஆகியோர் சென்ற ஜுலை மாதம் 07ம் திகதி தமிழ்நாடு திருச்சி மாவட்டத்தில் கரையொதுங்கி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 05 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கும் இடையிலான சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

சின்ன பாலமுனையை சேர்ந்த இர்பான் என்ற மீனவர் மாத்திரம் சென்னை உயர்ஸ்தானிகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 04 மீனவர்கள் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 05 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மீனவர்களினது படகுகள், இயந்திரங்கள் தொடர்பாக கல்முனை கடற்றொழில் பணிப்பாளரின் அறிக்கை கிடைத்ததும் நஷ்டயீடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

கடற்றொழிலுக்கு சென்று தமிழ் நாட்டில் கரையொதுங்கிய வட கிழக்கு மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை. கடற்றொழிலுக்கு சென்று தமிழ் நாட்டில் கரையொதுங்கிய வட கிழக்கு மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அட்டாளைச்சேனை  கப்பலடி மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக இயந்திர படகில் கடலுக்கு சென்ற மீனவர்களும் பருத்தித்துறை மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 05 மீனவர்களும் தமிழ் நாட்டில் சென்ற ஜுலை மாதம் 07ம் திகதி கரையொதுங்கினர்.அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கே.ஆர்.நிஸ்பர் என்பவர் காணாமல் போயுள்ளார். இம்மீனவர்களில் அட்டாளைச்சேனையிலிருந்து சென்ற இர்பான் எனும் மீனவர் சென்னை உயர்ஸ்தானிகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.பருத்தித்துறை மீனவர் துறையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 05 மீனவர்களான அட்டாளைச்சேனை சேர்ந்த எம்.எப்.முஸ்தகீன், வடமாகாணத்தை சேர்ந்த என்.குனபாலசிங்கம், ஏ.இராதாகிருஸ்னன், எம்.பிரமசிறி ஆகியோர் சென்ற ஜுலை மாதம் 07ம் திகதி தமிழ்நாடு திருச்சி மாவட்டத்தில் கரையொதுங்கி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 05 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கும் இடையிலான சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.சின்ன பாலமுனையை சேர்ந்த இர்பான் என்ற மீனவர் மாத்திரம் சென்னை உயர்ஸ்தானிகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 04 மீனவர்கள் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 05 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மீனவர்களினது படகுகள், இயந்திரங்கள் தொடர்பாக கல்முனை கடற்றொழில் பணிப்பாளரின் அறிக்கை கிடைத்ததும் நஷ்டயீடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement