• May 24 2025

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்;ரி.ஐ.டியினர் விசாரணை..!

Sharmi / May 23rd 2025, 9:00 am
image

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காவல்துறை செய்தித் தொடர்பாளர் SSP புத்திக மனதுங்க  இதனை தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னணி

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்திற்கு பை ஒன்றில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற இரு பெண்கள், கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். 

 அதன்படி அந்த பெண்ணின் பையில் T56 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த துப்பாக்கி தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. 

தங்கள் மோட்டார் வாகனத்தின் டிக்கி  பூட்ட முடியாத நிலையில் இருந்ததாகவும் அதற்குள் யாரோ இந்த துப்பாக்கியுடன் கூடிய பையை வைத்திருந்ததாகவும், அது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி என நினைத்து எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 72 மணி நேர பொலிஸ் காவல் உத்தரவு பெறப்பட்டது. 

மேலதிக விசாரணைகளின் போது, முக்கிய சந்தேக நபரான பெண், அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தனது வீட்டில் பணியாற்றும் சமையல்காரர் மூலம் இந்த துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக கூறியள்ளார் 

இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சமையல்காரர் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் பொலிசார் அரசியல்வாதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதளமை குறிப்பிடத்தக்கது 



தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்;ரி.ஐ.டியினர் விசாரணை. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காவல்துறை செய்தித் தொடர்பாளர் SSP புத்திக மனதுங்க  இதனை தெரிவித்தார்.சம்பவத்தின் பின்னணிகொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்திற்கு பை ஒன்றில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற இரு பெண்கள், கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.  அதன்படி அந்த பெண்ணின் பையில் T56 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கி தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. தங்கள் மோட்டார் வாகனத்தின் டிக்கி  பூட்ட முடியாத நிலையில் இருந்ததாகவும் அதற்குள் யாரோ இந்த துப்பாக்கியுடன் கூடிய பையை வைத்திருந்ததாகவும், அது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி என நினைத்து எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 72 மணி நேர பொலிஸ் காவல் உத்தரவு பெறப்பட்டது. மேலதிக விசாரணைகளின் போது, முக்கிய சந்தேக நபரான பெண், அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தனது வீட்டில் பணியாற்றும் சமையல்காரர் மூலம் இந்த துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக கூறியள்ளார் இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சமையல்காரர் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பொலிசார் அரசியல்வாதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதளமை குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement