• May 17 2024

காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிகளுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்!

Sharmi / Jan 19th 2023, 12:37 pm
image

Advertisement

மனம் உடைந்த காதலன் அல்லது காதலியின் நினைவாக, அவரை வெறுக்காமல், கரப்பான் பூச்சிகளுக்கு அவரது பெயரை சூட்டும் விநோத நிகழ்ச்சி கனடாவின் டொராண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் தொடங்குகிறது.

கனேடியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'நேம் எ கரப்பான் பூச்சி' எனும் இந்த நிகழ்ச்சி எதிர்வரும் காதலர் தினத்துடன் இணைந்து அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதற்காக மிருகக்காட்சிசாலைக்கு $25 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சி ஒரு தொல்லை தரும் பூச்சி. வாழ்க்கைக்கு ஒரு பிரச்சனையை உருவாக்குபவர். பிரிந்து சென்ற காதலன் அப்படிப்பட்டவனாக இருந்தால்,அந்த அன்பின் நினைவாக கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்க வாய்ப்பளிக்கிறோம். எங்களிடம் போதுமான கரப்பான் பூச்சிகள் உள்ளன' என மிருகக்காட்சிசாலை வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சியை பரிந்துரைக்க விரும்புவோர் பணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து திருப்பி அனுப்ப வேண்டும். எனினும்இ ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் பெயர்களை இடுவதற்கு அனுமதியில்லை என மிருகக்காட்சிசாலை வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.





காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிகளுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம் மனம் உடைந்த காதலன் அல்லது காதலியின் நினைவாக, அவரை வெறுக்காமல், கரப்பான் பூச்சிகளுக்கு அவரது பெயரை சூட்டும் விநோத நிகழ்ச்சி கனடாவின் டொராண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் தொடங்குகிறது.கனேடியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'நேம் எ கரப்பான் பூச்சி' எனும் இந்த நிகழ்ச்சி எதிர்வரும் காதலர் தினத்துடன் இணைந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மிருகக்காட்சிசாலைக்கு $25 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.கரப்பான் பூச்சி ஒரு தொல்லை தரும் பூச்சி. வாழ்க்கைக்கு ஒரு பிரச்சனையை உருவாக்குபவர். பிரிந்து சென்ற காதலன் அப்படிப்பட்டவனாக இருந்தால்,அந்த அன்பின் நினைவாக கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்க வாய்ப்பளிக்கிறோம். எங்களிடம் போதுமான கரப்பான் பூச்சிகள் உள்ளன' என மிருகக்காட்சிசாலை வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரப்பான் பூச்சியை பரிந்துரைக்க விரும்புவோர் பணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து திருப்பி அனுப்ப வேண்டும். எனினும்இ ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் பெயர்களை இடுவதற்கு அனுமதியில்லை என மிருகக்காட்சிசாலை வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement