• May 19 2024

வீட்டுக்குள்ளும் கோத்தாபயவுக்கு தொடர் சிக்கல்!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 10:28 am
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தங்கியிருந்த பௌத்தாலோக பகுதியிலுள்ள வீட்டிலும் பல சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த காலம் முதல் நடந்த போராட்டத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்குத் திரும்பிய அவர் தங்குவதற்கு கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதான வீதிக்கு முன்பாக கட்டப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டது.

ஆனால், சில நாள்களுக்குப் பிறகு, தொடர்ந்து வாகனங்களின் சத்தமும், அவற்றின் ஹோன்களும் ஒலித்ததால், கோத்தாபயவுக்கு அந்த வீட்டில் வசிப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இதன்காரணமாக இந்த உத்தியோகபூர்வ இல்லத்துக்குப் பதிலாக வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கவேண்டும் என்று கோத்தாபய பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தங்கியிருந்த விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்குக் குடியேறியுள்ளார். இதனால் அவர் இதுவரை தங்கியிருந்த புல்லர்ஸ் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்ல கோத்தாபய தீர்மானித்துள்ளார்.

எனினும் பல்வேறு காரணங்களால் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், அவருக்குப் பழக்கமான மீரிஹானையில் அமைந்துள்ள வீட்டில் அமைதியான சூழலில் தங்க கோத்தாபய முடிவெடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

வீட்டுக்குள்ளும் கோத்தாபயவுக்கு தொடர் சிக்கல்SamugamMedia முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தங்கியிருந்த பௌத்தாலோக பகுதியிலுள்ள வீட்டிலும் பல சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த காலம் முதல் நடந்த போராட்டத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்குத் திரும்பிய அவர் தங்குவதற்கு கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதான வீதிக்கு முன்பாக கட்டப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டது.ஆனால், சில நாள்களுக்குப் பிறகு, தொடர்ந்து வாகனங்களின் சத்தமும், அவற்றின் ஹோன்களும் ஒலித்ததால், கோத்தாபயவுக்கு அந்த வீட்டில் வசிப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.இதன்காரணமாக இந்த உத்தியோகபூர்வ இல்லத்துக்குப் பதிலாக வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கவேண்டும் என்று கோத்தாபய பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தங்கியிருந்த விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்குக் குடியேறியுள்ளார். இதனால் அவர் இதுவரை தங்கியிருந்த புல்லர்ஸ் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்ல கோத்தாபய தீர்மானித்துள்ளார்.எனினும் பல்வேறு காரணங்களால் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், அவருக்குப் பழக்கமான மீரிஹானையில் அமைந்துள்ள வீட்டில் அமைதியான சூழலில் தங்க கோத்தாபய முடிவெடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement